Published : 25 Aug 2025 06:47 AM
Last Updated : 25 Aug 2025 06:47 AM

​​​​​​​அதிகளவில் கையிருப்பு வைத்திருக்கும் தங்கத்தால் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் நாடுகள்

புதுடெல்லி: உலகள​வில் தங்​கத்தை அதி​கம் வைத்​திருக்​கும் நாடு​களை உலக தங்க கவுன்​சில் பட்​டியலிட்​டுள்​ளது. அதில் முதல் இடத்​தில் அமெரிக்கா உள்​ளது.

அமெரிக்​கா​விடம் தற்​போதைய நில​வரப்​படி 8,133 டன் தங்​கம் இருப்பு உள்​ளது. அமெரிக்​கா​வின் நிதி நெருக்​கடி மற்​றும் பொருளா​தா​ரத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டாலும் அதில் இருந்து மீண்டு வர தங்கம் பயன்​படு​கிறது. அமெரிக்​கா​விடம் தங்​கத்​தின் இருப்பு அதி​கம் இருப்​ப​தால், அமெரிக்க கரன்​சி​யில் முதலீடு செய்​யும் முதலீட்​டாளர்​களின் நம்​பிக்​கை​யும் அதி​கரிக்​கிறது. இதன் மூலம் உலகளா​விய நிதி​நிலை​யில் அமெரிக்கா ஆதிக்​கம் செலுத்​துகிறது.

ஜெர்​மனி 3,351 டன் தங்​கத்தை இருப்பு வைத்து 2-வது இடத்​தில் உள்​ளது. 2-ம் உலகப் போருக்​குப்​பின், ஜெர்​மனி​யிடம் உள்ள தங்​கம் இருப்​பு​தான் அதன் பலமாக இருந்​தது. இத்​தாலி, 2,451 டன் தங்​கத்​துடன் உலகத் தர வரிசை​யில் 3-வது இடத்​தில் உள்​ளது. இத்​தாலி​யின் கடன் அதி​கரித்​த​போ​தி​லும், இது தனது தங்க கையிருப்பை விற்று பொருளா​தார பாதிப்​பு​களை சமாளிக்​கிறது.

பிரான்ஸ் 2,452 டன் தங்​கத்​துடன் 4-வது இடத்​தில் உள்​ளது. ஐரோப்​பிய நாடு​களின் கரன்​சி​யான யூரோவுக்கு பிரான்ஸ் வைத்​திருக்​கும் தங்​கம்​தான் பலம் அளிக்​கிறது. இதன் மூலமே ஐரோப்​பிய கூட்​டமைப்​பின் நிதி​யில் பிரான்ஸ் சக்​தி​வாய்ந்த நாடாக உள்​ளது. ரஷ்யா 2,333 டன்​ தங்​கம் இருப்​புடன் 5-வது இடத்​தில் உள்​ளது. உக்​ரைனில் ஊடுருவி ரஷ்யா தாக்​குதல் நடத்​தி​ய​தால், அந்​நாட்​டின் மீது அமெரிக்க மற்​றும் ஐரோப்​பிய யூனியன் நாடு​கள் பொருளா​தார தடைகள் விதித்​தன. ரஷ்​யா​வின் கரன்​சி​யான ரூபிளின் மதிப்பை குறைக்​கும் முயற்​சி​யில் அமெரிக்கா, ஐரோப்​பிய யூனியன் நாடு​கள் இறங்​கின. இந்த பாதிப்​பு​களில் இருந்து ரஷ்​யாவை பாது​காப்​பது அதனிடம் உள்ள தங்​கம் கையிருப்​பு​தான்.

சீனா 2,292 டன் தங்​கம் கையிருப்​புடன் 6-ம் இடத்​தில் உள்​ளது. சுவிட்​சர்​லாந்து 1,040 டன் தங்​கத்​துடன் 7-ம் இடத்​தில் உள்​ளது. இந்​திய ரிசர்வ் வங்​கி​யிடம் உள்ள 880 டன் தங்​கம் மூலம் உலகள​வில் 8-ம் இடத்​தில் உள்​ளது. இந்​தி​யா​வின் அன்​னிய செலா​வணி கையிருப்பை இந்த தங்​கம்​தான் நிலை​யாக வைத்​துள்​ளது. உக்​ரைன், இஸ்​ரேல் போர் காரண​மாக உலகளா​விய பொருளா​தார பிரச்​சினை​களை சந்​திக்​கும்​போதும், இந்த தங்க கையிருப்​பு​தான் தடுப்​புச் சுவ​ராக உள்​ளது. மேலும், இந்​திய மக்​களிடம் 25,000 டன் தங்​கம் இருப்பு உள்​ளது. இது இந்​தி​யா​வுக்​கு மிகப்​ பெரிய மறை​முக சக்​தி​யாக இருந்​து பலம்​ அளிக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x