Published : 22 Aug 2025 07:34 AM
Last Updated : 22 Aug 2025 07:34 AM

ஏர் இந்​தி​யா, ஏஐ எக்​ஸ்​பிரஸ் இழப்பு ரூ.9,568 கோடி

புதுடெல்லி: சிவில் விமானப் போக்​கு​வரத்து இணை​யமைச்​சர் முரளிதர் மோஹோல் மக்​களவை​யில் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதில்: கடந்த மார்ச் மாதத்​துடன் முடிவடைந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ஏர் இந்​தியா மற்​றும் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை கண்​டுள்​ளன.

ஆகாசா ஏர் மற்​றும் ஸ்பைஸ்​ஜெட் ஆகியவை வரிக்கு முன், முறையே ரூ.1,983.4 கோடி மற்​றும் ரூ.58.1 கோடி இழப்பை சந்​தித்​துள்​ளன. அதேசம​யம், இண்​டிகோ நிறு​வனம் வரிக்கு முந்​தைய லாப​மாக ரூ.7,587.5 கோடியை ஈட்​டி​யுள்​ளது.

டாடா குழு​மத்​துக்கு சொந்​த​மான ஏர் இந்​தியா வரிக்கு முன் ரூ.3,890.2 கோடி இழப்பை சந்​தித்​தது. நீண்ட கால​மாக லாபத்​தில் இயங்கி வந்த அதன் அங்​க​மான ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் நிறு​வன​மும் கடந்த நிதி​யாண்​டில் ரூ.5,678.2 கோடி இழப்பை பதிவு செய்​துள்​ளது.

ஏர் இந்​தி​யா​வின் கடன் ரூ.26,879.6 கோடி​யாக​வும், இண்​டிகோ​வின் கடன் ரூ.67,088.4 கோடி​யாக​வும் இருந்​தது. ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ், ஆகாசா ஏர் மற்​றும் ஸ்பைஸ்​ஜெட் ஆகிய​வற்​றின் கடன் முறையே ரூ.617.5 கோடி, ரூ.78.5 கோடி மற்​றும் ரூ.886 கோடி​யாக உள்​ளது. இவ்​வாறு அந்த பதிலில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. நஷ்டத்​தில் இயங்​கிய ஏர் இந்​தியா மற்​றும் லாபகர​மான ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் நிறு​வனங்​களை டாடா குழு​மம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் கையகப்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x