Published : 22 Aug 2025 07:20 AM
Last Updated : 22 Aug 2025 07:20 AM

முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீதம் வளர்ச்சியடையும்: எஸ்பிஐ வங்கி அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: ரிசர்வ் வங்​கி​யின் மதிப்​பீட்​டை​யும் தாண்​டி, முதல் காலாண்​டில் இந்​திய பொருளா​தா​ரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்​சியை அடை​யும் வாய்ப்​புள்​ள​தாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்​தியா வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய பொருளா​தார வளர்ச்சி குறித்து எஸ்​பிஐ வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் நாட்​டின் ஒட்டு மொத்த பொருளா​தார வளர்ச்சி 6.5 சதவீத​மாக இருக்​கும் என இந்​திய ரிசர்வ் வங்கி மதிப்​பிட்​டது.

ஆனால் இந்த காலாண்​டில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை ஆய்வு செய்​த​போது, அது 6.9 சதவீதம் என காட்​டு​கிறது. அதனால் 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி தோராய​மாக 6.8 முதல் 7 சதவீத​மாக இருக்​கும் என ஆரம்​பகட்ட மதிப்​பீடு​கள் தெரிவிக்​கின்​றன. முந்​தைய காலாண்​டு​களை வளர்ச்சி பாதையை ஆய்வு செய்து இந்த முன்​னறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

2026-ம் ஆண்டு முழு​வதும் நாட்​டின் ஒட்டு மொத்த பொருளா​தார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்​கும் என எங்​கள் ஆய்வு தெரிவிக்​கிறது. இது ரிசர்வ் வங்​கி​யின் முழு ஆண்டு இலக்​கான 6.5 சதவீதத்தை விட குறைவு. 2023-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் உண்​மை​யான மற்​றும் பெயரளவி​லான பொருளா​தார வளர்ச்​சிக்கு இடையே​யான இடைவெளி குறைவது குறித்​தும் இந்த அறிக்கை ஆலோ​சித்​தது. 2023-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில், இந்த இடைவெளி 12 சதவீத​மாக இருந்​தது.

அது 2025-ம் ஆண்டு நிதி​யாண்​டில் நான்​காவது காலாண்​டில் 3.4 சதவீத​மாக குறைந்​தது. 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் இந்த இடைவெளி மேலும் குறை​யும் என இந்த அறிக்கை கூறுகிறது. அதன்​படி 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் உண்​மை​யான பொருளா​தார வளர்ச்சி 6.8 சதவீதம் முதல் 7 சதவீத​மாக இருக்​கும். இவ்​வாறு எஸ்​பிஐ அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x