Published : 22 Aug 2025 06:57 AM
Last Updated : 22 Aug 2025 06:57 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு

சென்னை: சென்​னை​யில் ஆபரண தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்​து, ரூ.73,840-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும் குறைந்​தும் வரு​கிறது. இந்​நிலை​யில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.73,840-க்கு விற்​பனை​யானது. ஒரு கிராம் தங்​கம் ரூ.50 உயர்ந்து ரூ.9,230-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் சுத்த தங்​கம் ரூ.80,552-க்கு விற்​கப்​பட்​டது. இதே​போல, வெள்ளி கிரா​முக்கு ரூ.1 உயர்ந்து ரூ.126-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1,26,000-க்​கும் விற்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x