Published : 20 Aug 2025 06:44 AM
Last Updated : 20 Aug 2025 06:44 AM

அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: அரிய வகை கனிமங்​களை இந்​தி​யா​வுக்கு வழங்​கத் தயார் என்று சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி அறி​வித்​துள்​ளார். சீன வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் வாங் யி 2 நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று முன்​தினம் மாலை டெல்லி வந்​தார். இதைத் தொடர்ந்து அவர், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் ஜெய்​சங்​கரை சந்​தித்து பேசி​னார்.

இந்த சந்​திப்​புக்கு பிறகு இரு​வரும் கூட்​டாக அறிக்​கையை வெளி​யிட்​டனர். அதில் இரு நாடு​களுக்​கும் இடையி​லான கருத்து வேறு​பாடு​கள் சர்ச்​சைகளாக மாறக்​கூ​டாது. அனைத்து வடிவங்​களி​லும் வரும் தீவிர​வாதத்தை எதிர்த்​துப் போராடு​வது என்​பது இரு நாடு​களின் முக்​கிய முன்​னுரிமை​யாகும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்த சந்​திப்​பின் போது இந்​தி​யா​வுக்கு உரம், அரிய வகை கனிமங்​கள், சுரங்​கப்​பாதை எந்​திரங்​களை வழங்க சீனா தயா​ராக இருப்​ப​தாக மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கரிடம் சீன அமைச்​சர் வாங் யி உறு​தி​யளித்​தார். இதுதொடர்​பான வினியோகம் மீண்​டும் தொடங்​கும் என்​றும் வாங் யி தெரி​வித்து உள்​ளார்.

கடந்த மாதம் மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கர் சீனா​வுக்கு சென்​றிருந்​த​போது உரம், அரிய​வகை கனிமங்​கள் வினியோகம் தொடர்​பான பிரச்​சினையை சீன அமைச்​சர் வாங் யிடம் எழுப்​பிய​தாக தெரி​கிறது. இதைத் தொடர்ந்து அவர் தற்​போது இந்த உறு​தியை அளித்து உள்​ளார் என்று தெரிய​வந்​துள்​ளது.

இதனிடையே சீன அமைச்​சர் வாங் யி, நேற்று காலை தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலை சந்​தித்து பேசி​னார். அதன் பிறகு பிரதமர் மோடியைச் சந்​தித்​து, சீன அமைச்​சர் வாங் யி பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார் சீனா​வின் தியான்​ஜின் நகரில் வரும் 31, செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் வரு​டாந்​திர உச்சி மாநாடு நடை​பெறவுள்​ளது. இதில் பங்​கேற்க பிரதமர் மோடி சீனா செல்​வார் என எதிர்​பாார்க்​கப்​படும் நிலை​யில், பிரதமர் மோடி - வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x