Published : 18 Aug 2025 08:36 AM
Last Updated : 18 Aug 2025 08:36 AM

உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: வியாபாரிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: டெல்​லி​யில் ரூ.11,000 கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி வைத்​தார். அப்​போது பேசிய அவர், உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வியா​பாரி​கள் விற்​பனை செய்ய வேண்​டும் என்று அழைப்பு விடுத்​தார். தலைநகர் டெல்​லி​யின் சிவ​மூர்த்தி பகு​தி​யில் இருந்து ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம் வரை 29 கி.மீ. தொலை​வுக்கு புதிய நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டது.

இதில் ஹரி​யா​னா​வுக்கு உட்​பட்ட 19 கி.மீ. தொலைவு சாலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து டெல்லி எல்​லைக்கு உட்​பட்ட 10 கி.மீ. தொலைவு சாலை பணி ரூ.5,360 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது. துவாரகா நெடுஞ்​சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார்.

இதே​போல டெல்​லி​யின் அலிப்​பூர் முதல் டிச்​சான் கலான் பகுதி வரை ரூ.5,580 கோடி​யில் நகர்ப்​புற விரி​வாக்க சாலை அமைக்கப்பட்டு உள்​ளது. டெல்​லி​யின் 3-வது ரிங் சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். டெல்லி ரோஹினி பகு​தி​யில் நடந்த விழா​வில் அவர் பேசி​ய​தாவது: டெல்​லி​யின் போக்​கு​வரத்து கட்டமைப்புகளை மேம்​படுத்த மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது.

புதி​தாக திறக்​கப்​பட்​டிருக்​கும் இரு நெடுஞ்​சாலைகளால் வியா​பாரி​கள், விவ​சா​யிகள், பொது​மக்​கள் பெரிதும் பயன் அடைவார்கள். டெல்லி மக்​களின் அனைத்து பிரச்​சினை​களுக்​கும் தீர்வு காணப்​பட்டு வரு​கிறது. குறிப்​பாக யமுனை நதி தூய் மைப்​படுத்​தப்​படு​கிறது. காற்று மாசுவை கட்​டுப்​படுத்த பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. டெல்​லி​யில் தற்​போது 650 மின்​சார பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த எண்​ணிக்கை 2,000 ஆக உயர்த்​தப்​படும்.

கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மிக முக்​கிய கோப்​பு​கள் மிக நீண்ட கால​மாக தேங்கி கிடந்​தன. பாஜக ஆட்​சிக் காலத்​தில் கோப்​பு​கள் விரை​வாக நகர்​கின்​றன. வளர்ச்​சித் திட்​டங்​கள் வேகம் பெற்​றுள்​ளன. கடந்த 11 ஆண்​டு​களில் சாலை, ரயில், விமான போக்​கு​வரத்து கட்​டமைப்​பு​கள் கணிச​மாக மேம்​படுத்​தப்​பட்டு உள்​ளன.

விரை​வில் ஜிஎஸ்டி வரி குறைக்​கப்பட உள்​ளது. எனவே வரும் தீபாவளி பண்​டிகை பொது​மக்​களுக்கு இரட்டை தீபாவளி​யாக அமை​யும். அனைத்து தரப்பு மக்​களுக்​கும் இரட்டை போனஸ் கிடைக்​கும். கடந்த காலத்​தில் காதித் துறை நலிவடைந்த நிலை​யில் இருந்​தது. பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு காதித் துறை தொடர்ந்து வலு​வடைந்து வரு​கிறது. காதி விற்​பனை 7 மடங்கு வரை அதி​கரித்து உள்​ளது.

ஒரு காலத்​தில் வெளி​நாடு​களில் இருந்து மொபைல் போன்​களை இறக்​குமதி செய்து வந்​தோம். இப்​போது ஓராண்​டில் சுமார் 35 கோடி மொபைல்​போன்​கள் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​படு​கின்​றன. இவை வெளி​நாடு​களுக்​கும் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்றன. இந்த நேரத்​தில் இந்​திய வியா​பாரி​களிடம் ஒரு வேண்​டு​கோளை முன்​வைக்​கிறேன்.

இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே நீங்​கள் விற்​பனை செய்ய வேண்​டும். வெளி​நாட்டு பொருட்​களை விற்பனை செய்​வதை தவிர்க்க வேண்​டும். இதே​போல நாட்டு மக்​கள் அனை​வரும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்டுமே வாங்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x