Published : 17 Aug 2025 09:18 AM
Last Updated : 17 Aug 2025 09:18 AM
புதுடெல்லி: அணுசக்திப் பொருட்களை தவறான பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக யுரேனியம் தாதுக்களை வெட்டியெடுத்தல், இறக்குமதி செய்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசு தனி யாரை அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் 2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் அணுமின் உற்பத்தி திறனை 12 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அணுசக்தி துறையில் அரசின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இத்துறையில் தனியாரையும் அனுமதிப்பது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது.
என்றாலும் உலகளாவிய நடைமுறைகளைப் பின்பற்றி பயன்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை மறுசுழற்சி செய்தல் மற்றும் புளூட்டோனியம் கழிவுகளை நிர்வகித்தல் ஆகியவற்றில் அரசு தனது பிடியை தக்க வைத்துக் கொள்ளும்.
இந்தியாவில் 76,000 டன் யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 30 ஆண்டுகளுக்கு தலா 10 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்திக்கு போதுமானது. என்றாலும் அரசின் இலக்கை எட்டுவதற்கான தேவையில் சுமார் 25% மட்டுமே உள்நாட்டு வளங்கள் பூர்த்தி செய்ய முடியும். எனவே 75% இறக்குமதி செய்யப்பட வேண்டும். மேலும் இந்தியா அதன் பதப்படுத்துதல் திறனை அதிகரிப்பதும் அவசியமாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT