Last Updated : 08 Aug, 2025 10:01 AM

 

Published : 08 Aug 2025 10:01 AM
Last Updated : 08 Aug 2025 10:01 AM

தங்கம் விலை பவுன் ரூ.76,000-ஐ நெருங்கியது

சென்னை: சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.76,000-ஐ நெருங்கி நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு உள்​ளிட்​டவை காரண​மாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. கடந்த ஜனவரி தொடக்​கத்​தில் ஒரு பவுன் ரூ.58 ஆயிர​மாக இருந்தது.

பின்​னர், போர் பதற்​றம் உள்பட பல காரணங்​களால், தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஜூலை 23-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.75,040 என்ற உச்​சத்தை அடைந்​தது. பின்​னர், ஏற்ற இறக்​க​மாக இருந்த நிலை​யில், நேற்று புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்​து, ரூ.75,200-க்கு விற்​பனையானது. ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.9.400-க்கு விற்​கப்​பட்​டது.

அந்தவகையில் ஆகஸ்ட் 2 முதல் 7-ம் தேதி வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்​துள்​ளது.

இந்நிலையில் இன்று (ஆக.8) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.75,760-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.127-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,27,000-க்கு விற்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x