Published : 07 Aug 2025 06:55 AM
Last Updated : 07 Aug 2025 06:55 AM

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

மும்பை: ரெப்​போ வட்டி விகிதங்​களில் மாற்​றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்​சய் மல்​ஹோத்ரா கூறிய​தாவது: பருவ மழைப் பொழிவு மற்​றும் நெருங்கி வரும் பண்​டிகை காலம் பொருளா​தா​ரத்​துக்கு சாதக​மாக இருந்​தா​லும் உலகளா​விய வர்த்தக சவால்​கள் தொடர்ந்து நீடிக்​கும் நிலை உள்​ளது. நடுத்தர கால அளவில் இந்​திய பொருளா​தார வளர்ச்​சிக்​கான அடிப்​படைகள் பிர​காச​மான வாய்ப்​பு​களைக் கொண்​டுள்​ளது.

2025-ம் ஆண்​டில் ரெப்​போ வட்டி விகிதங்​களில் 100 அடிப்​படை புள்​ளி​கள் குறைக்​கப்​பட்ட நிலை​யில் தற்​போது மாற்​றமில்​லாமல் 5.5% என்ற அளவில் வைத்​திருக்க முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது. பணவீக்​கத்​தைப் பொருத்​தவரை​யில் 4 சதவீதத்​துக்​கும் மேல் உயர வாய்ப்​புள்​ளது. அதே​நேரம் 2025-26 நிதி​யாண்​டில் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி வளர்ச்சி மதிப்​பீடு மாற்​றமின்றி 6.5 சதவீத​மாகவே நீடிக்​கும். சவாலான வெளிப்​புற காரணி​கள் இருந்​த​போ​தி​லும், இந்​தி​யப் பொருளா​தா​ரம் ஸ்திரத்​தன்​மை​யுடன் நிலை​யான வளர்ச்​சிப் பாதை​யில் பயணிக்​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x