Published : 05 Aug 2025 06:35 AM
Last Updated : 05 Aug 2025 06:35 AM

அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது இந்தியா: 4 சரக்கு கப்பல்கள் குஜராத் வந்தன

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் அழுத்​தத்தை மீறி ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இந்​தியா தொடர்ந்து வாங்கி வரு​கிறது. 4 சரக்கு கப்​பல்​களில் ரஷ்ய கச்சா எண்​ணெய் குஜ​ராத் வந்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. ரஷ்​யா, உக்​ரைன் இடையே மூன்​றரை ஆண்​டு​களுக்​கும் மேலாக போர் நீடித்து வரு​கிறது.

இந்த போர் காரண​மாக ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய், இயற்கை எரி​வா​யுவை இறக்​குமதி செய்​வதை ஐரோப்​பிய நாடு​கள் முழு​மை​யாக நிறுத்​தி​விட்​டன. இதைத் தொடர்ந்து ரஷ்​யா​விடம் இருந்து மிகக் குறைந்த விலை​யில் கச்சா எண்​ணெயை இந்​தியா இறக்​குமதி செய்து வரு​கிறது. தற்​போது இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் தேவை​யில் 40 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்து வரு​கிறது.

இந்த சூழலில் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​தால் இந்​தி​யா​வுக்கு அபராதம் விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் எச்​சரிக்கை விடுத்​தார். இந்த சூழலில் அமெரிக்​கா​வின் அழுத்​தத்தை மீறி ரஷ்​யா​வில் இருந்து 4 சரக்கு கப்​பல்​களில் குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகத்​துக்கு கச்சா எண்​ணெய் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: இந்​திய, ரஷ்ய கூட்டு நிறு​வன​மான நயா​ரா, மும்​பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்​படு​கிறது. இந்த நிறு​வனத்​தின் எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலையம்​ குஜ​ராத்​தின் வாடி​னார் நகரில் செயல்​படு​கிறது. ரஷ்​யா​வில் இருந்து சரக்கு கப்​பல்​களில் வரும் கச்சா எண்​ணெய் இந்த நிலை​யத்​தில் சுத்​தி​கரிப்பு செய்யப்​படு​கிறது. இங்​கிருந்து ஐரோப்​பிய நாடு​கள் உட்பட உலகம் முழு​வதும் பெட்​ரோல், டீசல் ஏற்​றுமதி செய்​யப்​படு​கிறது.

ஏற்​கெனவே ரஷ்​யா​வில் இருந்து இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் ஏற்றி வரும் 100 சரக்கு கப்​பல்​கள் மற்​றும் நயாரா நிறு​வனத்​தின் மீது ஐரோப்​பிய ஒன்​றி​யம் தடை விதித்​துள்​ளது. தற்​போது அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​தால் இந்​தி​யா​வுக்கு அபராதம் விதிக்​கப்​படும் என்று எச்​சரித்​துள்​ளார்.

அமெரிக்​கா, ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் அழுத்​தத்தை மீறி ரஷ்​யா​வில் இருந்து கச்சா எண்​ணெய் பேரல்​களு​டன் 4 சரக்கு கப்பல்கள் குஜ​ராத் வந்​துள்​ளன. இவை வாடி​னாரில் உள்ள நயாரா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலைய துறை​முகத்​துக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக அரு​கில் உள்ள முந்த்ரா துறை​முகத்​துக்கு 4 சரக்கு கப்​பல்​களும் சென்​றுள்​ளன. இதன்​மூலம் அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் தடை​யில் இருந்து தப்​பிக்க முடி​யும். இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x