Published : 27 Jul 2025 11:29 AM
Last Updated : 27 Jul 2025 11:29 AM

ஏற்ற இறக்கம் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது: பொருளாதார நிபுணர் பத்மநாபன் தகவல்

படங்கள்: எஸ்.சத்தியசீலன்

ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது என்று இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் பிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து சென்னையில் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் பா.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

'இந்து தமிழ் திசை' நாளிதழ் மற்றும் 'மிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட்' நிறுவனம் இணைந்து முதலீடும் முன்னேற்றமும்' என்ற கருப்பொருளுடன் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னையில் நேற்று நடத்தியது. இதில் பொருளாதார நிபுணர் பா.பத்மநாபன் பங்கேற்று, 'மியூச்சுவல் ஃபண்ட் குறிக்கோ ளுடன் கூடிய முதலீடு' என்ற தலைப்பில் பேசியதாவது:

நாம்நமதுவாழ்க்கையில் கல்வி,திருமணம், கனவு இல்லம், ஓய்வு காலம் போன்றவற்றுக் காக சேமித்து வருகிறோம். இன்று திருமணத் துக்கு சராசரியாக ரூ.20 லட்சம் செலவிடப்படு கிறது. இதுவே 20 ஆண்டுகள் கழித்து அது ரூ.77 லட்சமாக உயரும். இதற்கு காரணம் பண வீக்கம்.

தங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காக, மருத்துவ படிப்பாக இருந்தால் ரூ.1.50 கோடி செலவாகும். மருத்துவம் அல்லாத உயர் கல்வி படிப்புக்கு ரூ.25 லட்சம் சராசரியாக செலவாகும். இது 17 ஆண்டுகள் கழித்து அது ரூ.92.50 லட்சமாக உயரும். இந்த செலவுகளைச் சமாளிக்க திருமண செல வுக்கு மாதம் ரூ.6,750, உயர் கல்விக்கு மாதம் ரூ.12,500 வீதம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஓய்வு காலப் பலன்களுக்காக மாதம் ரூ.10,000 வீதம் ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்தி முதலீடு செய்யலாம்.

நமது முதலீடு பண வீக்கத்தைவிட அதிக மான லாபம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வ தன் மூலம் முடியும். மியூச்சுவல் ஃபண்டில் பெரிய அளவில் ரிஸ்க் இல்லை. ஆனால் ஏற்ற இறக்கம் நிச்சயம் இருக்கும். மியூச்சுவல் ஃபண்டில் ஆண்டுக்கு சராசரியாக 12% லாபம் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

முதுநிலை மேலாளர் எஸ்.கோபிநாத்

மிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன முதுநிலை மேலாளர் எஸ்.கோபிநாத் பேசியதாவது: ஒரு பொருளின் இன்றையவிலை, 20 ஆண்டுகள் கழித்து மேலும் உயர்ந்திருக்கும். இதைத் தான் பண வீக்கம் என்கிறோம். இன்று நாம் பணமாக சேர்த்து வைத்திருந்தால் வரும் காலங்களில் அது மதிப்பிழக்கும். ஒவ் வொரு ஆண்டும் பணவீக்கம் இருந்து கொண்டே இருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு சிறந்த தேர்வு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, அந்த சேவையை மிரே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வழங்குகிறது.

இந்நிறுவனம் ரூ.2.10 லட்சம் கோடி முதலீட்டை கையாள்கிறது. நாடு முழுவதும் 25 கிளைகளைக் கொண்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்தால்தான் எதிர்காலத்தில் செலவுகளை சமாளிக்க முடியும். மியூச்சுவல் ஃபண்டில் வெளிப்படைத் தன்மை உள்ளது. இதில் நீண்டகால முதலீடு செய்தால்தான் I பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x