Published : 27 Jul 2025 08:46 AM
Last Updated : 27 Jul 2025 08:46 AM

2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடி

தூத்துக்குடி: தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்கி 2025-26-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் ரூ.305 கோடி நிகர லாபம் ஈட்​டி​யுள்​ளது.

தூத்​துக்​குடியை தலை​மை​யிட​மாக கொண்டு செயல்​படும் தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்​கி​யின் இயக்​குநர் குழுக் கூட்​டம் நேற்று முன்​தினம் தூத்​துக்​குடி​யில் நடை​பெற்​றது. இதில் 2025- 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டுக்​கான நிதி​நிலை அறிக்கை முடிவு​கள் இறுதி செய்​யப்​பட்​டன.

வங்கி நிர்​வாக இயக்​குநர் மற்​றும் தலைமை செயல் அதி​காரி சலீ எஸ்​.​நாயர் இதை வெளி​யிட்​டார். அதன் விவரம்: 2025- 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் வங்கி தனது மொத்த வணி​கத்​தில் 9.86 சதவீதம் வளர்ச்​சி​யடைந்​து, ரூ.98,923 கோடியை எட்​டி​யுள்​ளது. வைப்​புத்​தொகை ரூ.53,803 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. கடன்​களின் மொத்த தொகை 10.44 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.45,120 கோடி​யாக உள்​ளது.

வங்​கி​யின் நிகர மதிப்பு ரூ.9,328 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. முந்​தைய ஆண்​டின் முதல் காலாண்​டில் இது ரூ.8,244 கோடி​யாக இருந்​தது. வங்கி நிகர லாபம் ரூ.305 கோடி​யாக உள்​ளது. முந்​தைய ஆண்​டில் இதே முதல் காலாண்​டில் நிகர லாபம் ரூ.287 கோடி​யாக இருந்​தது. நிகர வட்டி வரு​மானம் ரூ.567 கோடி​யில் இருந்​து, ரூ.580 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

வங்​கி​யின் மொத்த வாராக்​கடன் 1.44 சதவீதத்​தில் இருந்து 1.22 சதவீத​மாக​வும், நிகர வாராக்​கடன் 0.65 சதவீதத்​தில் இருந்து 0.33 சதவீத​மாக​வும் குறைந்​துள்​ளது. தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்கி பங்​கு​களின் புத்தக மதிப்பு ரூ.520.63-ல் இருந்து ரூ.589.09 ஆக அதி​கரித்​துள்​ளது. நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் வங்​கி​யின் சில்​லறை, விவ​சா​யம், சிறு, குறு நடுத்தர நிறு​வனங்​களின் கடன் தொகை ரூ.37,614 கோடி​யில் இருந்து ரூ.42,100 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. அதே​போல, முதல் காலாண்​டில் 7 புதிய கிளை​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

மனிதவள செயல்​பாடு​களை தவிர்த்​து, வங்கி முழு​வதும் செலவு கட்​டுப்​பாட்​டுக்​காக ஒருங்​கிணைக்​கப்​பட்ட விற்​பனை​யாளர் மேலாண்மை முறைமை அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. முழு​மை​யாக டிஜிட்​டல் மற்​றும் செயல்​முறை சார்ந்த வங்​கி​யாக மாறும் நோக்​கத்​தில் வணிக செயல்​முறை மேலாண்​மை​யை​யும் வங்கி அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x