Published : 18 Jul 2025 06:34 AM
Last Updated : 18 Jul 2025 06:34 AM

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; அழுத்தங்களுக்கு இந்தியா இடம் தரக் கூடாது: பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர்

புதுடெல்லி: பிரதமருக்​கான பொருளா​தார ஆலோசனை கவுன்சிலின் தலை​வர் எஸ். மகேந்​திர தேவ் கூறியதாவது: அமெரிக்கா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து இந்​தியா அதன் சொந்த விருப்​பம் மற்​றும் தேவை​யான விதி​முறை​களி்ன் அடிப்​படை​யில் பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும். எந்​த​வித அழுத்​தங்​களுக்​கும் இடம் கொடுக்க கூடாது. வர்த்தக ஒப்​பந்​தத்தை இறுதி செய்​வ​தில் நமது தேச நலனுக்கே முக்​கி​யத்​து​வம் கொடுக்க வேண்​டும். அதுவே முதன்​மை​யான​தாக​வும் இருக்க வேண்​டும். மற்ற நாடு​களைக் காட்​டிலும் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தங்​கள் இந்​தி​யா​வுக்கு சாதக​மாக இருக்​கும். இதனால், இந்​தி​யா​வுக்கு அதிக நன்​மை​கள் கிடைக்​கும் என்​ப​தோடு நாட்​டின் ஏற்​றும​தி​யும் அதி​கரிக்​கும் என்ற நம்​பிக்கை உள்​ளது.

இந்​தி​யா​வுடன் முன்​மொழியப்​பட்ட வர்த்தக ஒப்​பந்​தம், இந்​தோனேசி​யா​வுடன் இறுதி செய்து கொண்​டதைப் போலவே இருக்​கும் என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இந்த ஒப்​பந்​தத்​தின் கீழ் அமெரிக்க தயாரிப்​பு​களுக்கு இந்​தோனேசிய சந்தை முழு​மை​யான அணுகலை வழங்​கும். அதே​நேரம், இந்​தோனேசிய பொருட்​கள் அமெரிக்​கா​வில் 19 சதவீத வரி​வி​திப்​புக்கு உள்​ளாகும்.

மேலும், அமெரிக்​கா​விலிருந்து 15 பில்​லியன் டாலர் எரிசக்​தி, 4.5 பில்​லியன் டாலர் விவ​சாயப் பொருட்​கள், 50 போ​யிங் ஜெட் விமானங்​களை வாங்க இந்​தோனேசியா ஒப்​புதல் தெரி​வித்​துள்​ளது. விவ​சாய மற்​றும் பால் பொருட்​களுக்​கான அமெரிக்​கா​வின் வரிச் சலுகைகளுக்​கான கோரிக்​கை​யில் இந்​தியா தனது நிலைப்​பாட்​டில் உறு​தி​யாக உள்​ளது. இது​வரை, எந்​தவொரு நெருங்​கிய நட்பு நாட்​டுக்​கும் இதுதொடர்​பான வரி சலுகைகளை இந்​தியா வழங்​க​வில்​லை. இவ்​வாறு அவர்​ கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x