Published : 14 Jul 2025 06:11 AM
Last Updated : 14 Jul 2025 06:11 AM

பாஜகவுக்கு வேதாந்தா வழங்கிய நன்கொடை 4 மடங்காக உயர்வு

புதுடெல்லி: மும்​பையை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வரு​கிறது. அந்த நிறு​வனம் சார்​பில் கோவா, கர்​நாட​கா உட்பட பல மாநிலங்கள் மற்றும் லைபீரியா உள்​ளிட்ட வெளி​நாடு​களி​லும் சுரங்​கங்​கள் உள்​ளன.

இந்த சூழலில் 2024-25-ம் நிதி​யாண்​டில் பல்​வேறு கட்​சிகளுக்கு வழங்​கிய நன்​கொடை விவரங்​களை வேதாந்தா நிறுவனம் வெளி​யிட்டு இருக்​கிறது. இதன்​படி அந்த நிறு​வனம் சார்​பில் பாஜக​வுக்கு ரூ.97 கோடி நன்​கொடை வழங்​கப்​பட்டு உள்​ளது. அதற்கு முந்​தைய ஆண்டு பாஜக​வுக்கு ரூ.26 கோடி மட்​டுமே நன்​கொடை​யாக வழங்​கப்​பட்​டது.

இதன்​படி பாஜக​வுக்கு வேதாந்தா வழங்​கிய நன்​கொடை 4 மடங்​காக உயர்ந்​துள்​ளது. ஒடி​சாவை சேர்ந்த பிர​தான எதிர்க்​கட்​சி​யான பிஜு ஜனதா தளத்​துக்கு வேதாந்தா நிறுவனம் சார்​பில் ரூ.25 கோடி, ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்​சாவுக்கு ரூ.20 கோடி, காங்​கிரஸுக்கு ரூ.10 கோடி வழங்​கப்​பட்டு உள்​ளது.
இதற்கு முந்​தைய நிதி​யாண்​டில் காங்​கிரஸுக்கு ரூ.49 கோடி நன்​கொடை வழங்​கியுள்ளது. 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.10 கோடி மட்​டுமே நன்​கொடை வழங்​கப்​பட்​டிருக்​கிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வேதாந்தா நிறுவனம் சார்​பில் தேர்​தல் பத்​திரங்​கள் மூலம் பல்​வேறு அரசி​யல் கட்​சிகளுக்கு ரூ.457 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x