Published : 07 Jul 2025 07:42 AM
Last Updated : 07 Jul 2025 07:42 AM

உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியாவுக்கு 4-வது இடம்: உலக வங்கி அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: “உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது” என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

‘வறுமை மற்றும் சமத்துவம்’ தொடர்பான கினி குறியீட்டு அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. கினி குறியீடு என்பது ஒரு நாட்டின் மக்கள்தொகையில் வருவாய் மற்றும் செல்வ சமத்துவமின்மை தொடர்பான அளவீடாகும். கினி அட்டவணையின்படி 0 (சரியான சமத்துவம்) முதல் 100 (முழுமையான சமத்துவமின்மை) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், குறைந்த மதிப்பெண் பெறும் நாடுகளில் மிகவும் சமமான விநியோகம் உள்ளதை குறிக்கும்.

இந்த அறிக்​கை​யில் இந்​தி​யாவை பற்றி கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா 25.5 என்ற கினி குறி​யீட்டு மதிப்​பெண் பெற்​றுள்​ளது, இது வரு​வாய் சமத்​து​வத்​தில் உலகள​வில் 4-வது சமமான நாடாக உள்​ளது. ஸ்லோ​வாக் குடியரசு, ஸ்லோவேனியா மற்​றும் பெலாரஸ் நாடு​களுக்கு அடுத்து இந்​தியா 4-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது.

கினி குறி​யீட்​டின்​படி இந்​தியா 25.5 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. கடந்த 2011-ம் ஆண்டு கினி அட்​ட​வணை​யில் இந்​தியா 28.8 மதிப்​பெண் பெற்​றிருந்​தது. தற்​போது ஸ்லோ​வாக் குடியரசு (24.1), ஸ்லோவேனியா (24.3) மற்​றும் பெலாரஸ் (24.4) ஆகிய மதிப்​பெண்​களு​டன் முதல் 3 இடங்​களில் உள்​ளன. சீனா (35.7) மற்​றும் அமெரிக்கா (41.8) உள்​ளிட்ட முக்​கிய உலகளா​விய பொருளா​தார நாடு​கள், அனைத்து ஜி7 நாடு​கள் மற்​றும் ஜி20 நாடு​களை விட​வும் இந்​தியா பெற்​றுள்ள 25.5 மதிப்​பெண் வரு​வாய் சமத்​துவ நிலை முன்​னேற்​றத்தை பிர​திபலிக்​கிறது.

உலகின் முக்​கிய​மான பொருளா​தார நாடு​களுக்கு நிக​ராக இந்​தியா முன்​னேற்​றம் அடைந்​துள்​ளது எனலாம். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்​டுக்​குள் இந்​தி​யா​வில் 17 கோடியே 10 லட்​சம் பேர் மிகத் தீவிர வறுமை நிலை​யில் இருந்து முன்​னேற்​றம் கண்​டுள்​ளனர்.

மேலும், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்​டுக்​குள் இந்​தி​யா​வில் வறுமை​யில் உள்​ளவர்​களின் எண்​ணிக்கை 16.2 சதவீதத்​தில் இருந்து 2.3 சதவீத​மாக குறைந்​துள்​ளது. இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் வறுமை ஒழிப்​புக்​காக மத்​திய அரசு பல்​வேறு சமூகநலத் திட்​டங்​களை செயல்​படுத்​தி​யதே இதற்கு காரண​மாக அமைந்​துள்​ளன.

பிஎம் ஜன் தன் யோஜனா (55 கோடி மக்​களுக்கு வங்கி கணக்​கு), ஆதார் அட்டை வழங்​கியது (142 கோடி மக்​கள்), வங்​கி​களுக்கு நேரடி​யாக அரசு நலத்​திட்ட உதவித் தொகை வழங்​கியது (இத​னால் கடந்த 2023 மார்ச் மாதம் வரை​யில் ரூ.3.48 லட்​சம் கோடி சேமிக்​கப்​பட்​டுள்​ளது) போன்ற மத்​திய அரசின் திட்​டங்​கள் நேரடி​யாக மக்​களை சென்று சேரு​வதற்கு உதவி செய்​துள்​ளன.

தவிர ஆயுஷ்​மான் பாரத் திட்​டத்​தின் கீழ் இது​வரை 41 கோடி சுகா​தார அட்​டைகள் மக்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. அத்​துடன் ‘ஸ்​டேண்ட் அப் இந்​தி​யா’, பிஎம் விஸ்​வகர்மா யோஜ​னா, 80 கோடி மக்​களுக்கு இலவச உணவு தானி​யங்​கள் (பிரதம மந்​திரி கரிப் கல்​யாண் அன்ன யோஜ​னா) போன்ற திட்​டங்​களும் மிகப்​பெரிய பங்கு வகித்​துள்​ளன.

வரு​வாய் சமத்​து​வ​மின்மை உலகின் வளர்ந்த நாடு​களுக்கு கூட சவாலாக இருக்​கும் நிலை​யில், தொழில்​நுட்​பம் சார்ந்த அரசு நிர்​வாகம் எப்​படி சமத்​து​வ​மின்​மையை குறைக்​கும் என்​ப​தற்கு இந்​தி​யா​வின் நடவடிக்​கைகள் சான்​றாக உள்​ளன என்​று மத்​தி​ய சமூகநலத்​துறை தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x