Published : 07 Jul 2025 06:48 AM
Last Updated : 07 Jul 2025 06:48 AM

மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்!

சென்னை: கல்லூரி படிப்பை முடித்​து​விட்டு புதி​தாக வேலை​யில் சேர்​பவர்​களுக்கு அதிக சம்​பளம் வழங்​கு​வ​தில் சென்னை முதலிடத்​தில் உள்​ளது.

சர்​வ​தேச அளவி​லான வேலை​வாய்ப்பு இணை​யதள​மான இன்​டீட், ‘இன்​னாகுரல் பேமேப் சர்​வே' என்ற பெயரில் ஆய்வு மேற்​கொண்​டது. கரோனா பெருந்​தொற்​றுக்கு பிந்​தைய பொருளா​தா​ரத்​தில் வளர்ந்து வரும் சம்பள அளவு, துறை​சார் போக்கு மற்​றும் தொழிலா​ளர் மனநிலையை புரிந்​து​ கொள்​வதற்​காக, பல்​வேறு துறை சார்ந்த நிறு​வனங்​களின் 1,311 அதி​காரி​கள் மற்​றும் 2,531 ஊழியர்​களிடம் இந்த ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

இந்​தி​யா​வின் சம்பள கட்​டமைப்​பில் குறிப்​பிடத்​தக்க மாற்​றம் இருப்​பது இந்த ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. புதி​ய​வர்​களுக்​கான (0 முதல் 2 ஆண்டு அனுபவம்) தொடக்க நிலை சம்​பளப் பட்​டியலில் சென்னை முதலிடத்​தில் உள்​ளது. புதி​ய​வர்​கள் மாதம் ரூ.30,100 சம்​பா​திக்​கிறார்​கள். இது​போல மும்​பை, ஹைத​ரா​பாத்​தில் புதி​ய​வர்​களுக்​கான மாத சம்​பளம் 28,500 ஆகவும் பெங்​களூரு​வில் ரூ.28,400 ஆகவும் உள்​ளது.

மென்​பொருள் மேம்​பாடு முதல் பொறி​யாளர்​கள் வரை பல்​வேறு பணி​களில் சேரும் புதி​ய​வர்​கள் சராசரி​யாக மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30,500 வரை சம்​பளம் பெறுகிறார்​கள். தயாரிப்பு மற்​றும் திட்ட மேலாண்மை துறை​களில் அதிக சம்​பளம் கிடைக்​கிறது. நடுத்தர முதல் மூத்த நிபுணர்​கள் (5 – 8 ஆண்​டு​கள்) மாதம் ரூ.85,500 வரை சம்​பா​திக்​கிறார்​கள். யுஐ/​யுஎக்ஸ் நிபுணர்​கள் இப்​போது மென்​பொருள் உரு​வாக்​குநர்​களுக்கு இணை​யாக உள்​ளனர். இதில் முது​நிலை ஊழியர்​கள் மாதம் ரூ.65 ஆயிரம் வரை சம்​பா​திக்​கின்​றனர். ஹைத​ரா​பாத்​தில் பணிபுரி​யும் நடுத்தர அல்​லது முது​நிலை ஊழியர்​களுக்கு அதிக சம்​பளம் கிடைக்​கிறது. 5 முதல் 8 ஆண்டு அனுபவம் உள்​ளவர்​கள் மாதம் ரூ.69,700 வரை சம்​பளம் பெறுகின்​றனர்.

வாழ்​வியல் செலவு: இண்​டீட் இந்​தியா விற்​பனை பிரிவு தலை​வர் சசி குமார் கூறும்​போது, “சம்பள இயக்​க​வியல் மாறிக்​கொண்டே இருக்​கிறது. மேலும் வாழ்க்​கைச் செலவு மற்​றும் தொழில் திறன் ஆகிய இரண்​டுக்​கும் ஏற்ப இழப்​பீடு வழங்​கப்​படும் நகரங்​களுக்கு ஊழியர்​கள் முன்​னுரிமை தரு​கின்​றனர்” என்​றார்.

தங்​கள் வரு​மானம், நகரின் வாழ்க்​கைச் செல​வுக்கு ஏற்ப இல்லை என்று 69 சதவீத ஊழியர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இந்த வேறு​பாடு டெல்லி (96%), மும்பை (95%), புனே (94%) மற்​றும் பெங்​களூரு (93%) போன்ற பெருநகரங்​களில் அதி​க​மாக உள்​ளது. அதே​நேரம், சென்​னை, ஹைத​ரா​பாத், அகம​தா​பாத் மற்​றும் கொல்​கத்தா போன்ற நகரங்​களில் வாழ்க்​கைச் செலவு சமாளிக்​கும் வகை​யில் இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. வாழ்க்​கைச் செலவு அதி​க​மாக இருந்​தா​லும், உணர்​வுபூர்​வ​மான காரணங்​களுக்​காக வேறு நகரங்​களுக்கு மாற 69% ஊழியர்​கள் தயக்​கம் காட்​டு​கின்​றனர்.

டிஜிட்​டல் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு சார்ந்த பணி​களுக்​கான தேவை​யால், சம்பள விவ​காரத்​தில் தகவல் தொழில்​நுட்​பம் மற்​றும் அது தொடர்​பான சேவை துறை​கள் தொடர்ந்து ஆதிக்​கம் செலுத்​துகின்​றன. உற்​பத்தி மற்​றும் தொலைத்​தொடர்பு துறை​யில் சேரும் புதிய ஊழியர்​களும் மாதம் ரூ.28,100 முதல் ரூ.28,300 வரை சம்​பளம் பெறுகின்​றனர். 5 முதல் 8 ஆண்டு அனுபவம் உள்​ளவர்​கள் ரூ.67,700 முதல் ரூ.68,200 வரை சம்​பளம்​ பெறுகின்​றனர்​ என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்​ளது.

- பிஸினஸ்லைன் செய்திப் பிரிவு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x