Published : 24 Jun 2025 06:54 AM
Last Updated : 24 Jun 2025 06:54 AM
அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஏஎன்ஐஎல்) நிறுவனம் குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ஆப்-கிரிட் 5 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் ஆலையை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இது, நாட்டின் தூய எரிசக்தி மாற்றத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது: குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன ஆலை 100 சதவீதம் சூரிய சக்தியால் இயங்கும் பசுமை ஆலையாகும். பேட்டரி எரிசக்தி அமைப்புடன் (பிஇஎஸ்எஸ்) இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது பரவலாக்கப்பட்ட, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட ஹைட்ரஜன் உற்பத்தியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் முதல் ஆப்-கிரிட் 5 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் ஆலை இதுவாகும். மதிப்புமிக்க செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை இந்த ஆலை கொண்டுள்ளது. சூரியசக்தியின் மாறுபாட்டை கண்டறிந்து செயல்திறன் மற்றும் பாதுகாப்பை இந்த ஆலை உறுதி செய்யும்.
வளர்ந்து வரும் பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரத்தில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் தலைமைத்துவத்திற்கான அதானி குழுமத்தின் உறுதிப்பாட்டை இந்த முன்னோடித் திட்டம் வலுப்படுத்துகிறது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாறுவதற்கான இந்தியாவின் லட்சியத்துக்கு இது மேலும் வலுச் சேர்ப்பதாக அமையும். இவ்வாறு ஏஎன்ஐஎல் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT