Published : 17 Jun 2025 11:33 AM
Last Updated : 17 Jun 2025 11:33 AM
கடந்த வாரத்தில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.840 சரிந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.105 குறைந்து ரூ.9,200 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.840 குறைந்து ரூ.73,600 ஆகவும் இருக்கிறது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.114 குறைந்து ரூ.10,037 ஆகவும், பவுன் விலை ரூ.912 குறைந்து ரூ.80,296 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 1 கிராம் வெள்ளி விலை ரூ.120 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,20,000 ஆகவும் உள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் இப்போது வலுத்த சூழலிலும் தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. தங்கம் விலை ஏற்கெனவே உச்சத்தில்தான் இருக்கிறது என்றும், அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை வெளியாகவுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் அமைதி காத்து வருவதால் தங்கக்த்தின் தேவை குறைந்துள்ளது என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், தற்போதைய சர்வதேச போக்குகளைப் பொறுத்து அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT