Published : 13 Jun 2025 07:53 PM
Last Updated : 13 Jun 2025 07:53 PM
லாஸ் ஏஞ்சல்ஸ்: செயற்கை நுண்ணறிவின் துணையோடு பொம்மைகள் மற்றும் மொபைல் கேம்ஸ்களை வடிவமைக்கும் நோக்கில் ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்துடன் கைகோத்துள்ளது பார்பி பொம்மையை தயாரித்து, உலக அளவில் விற்பனை செய்யும் ‘மேட்டல்’ நிறுவனம். அது குறித்த விரைவுப் பார்வை இது.
மேட்டல் நிறுவனம் ஹாட் வீல்ஸ் கார்ஸ் மற்றும் யூனோ கார்டுகளையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்றைய டிஜிட்டல் காலத்துக்கு ஏற்ப நவீனத்துவம், பிரைவசி மற்றும் புதுமையை தங்கள் சார்ந்துள்ள தொழிலில் கொண்டு வரும் வகையில் ஓபன் ஏஐ உடன் இணைந்துள்ளதாக மேட்டல் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வர்த்தக ரீதியான கொள்கை காரணமாக பொம்மை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் வணிகம் மந்த நிலையில் உள்ளது. இந்த சூழலில்தான் மேட்டல் இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது.
தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், தயாரிப்புகளில் புதுமையை புகுத்தும் நோக்கிலும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட்டை பயன்படுத்தவும் மேட்டல் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் ஹாட் வீல்ஸ் மற்றும் பார்பி போன்ற தயாரிப்புகளை அடிப்படியாக கொண்டு டிவி ஷோக்கள், மொபைல் கேம்ஸ், திரைப்படங்கள் போன்றவற்றை மேட்டல் மேற்கொண்டு வருகிறது.
அதிகரித்து வரும் தயாரிப்பு மற்றும் விநியோக செலவை கருத்தில் கொண்டு உள்நாட்டு அளவில் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதாக கடந்த மாதம் மேட்டல் அறிவித்தது. அந்நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT