Published : 31 May 2025 05:20 AM
Last Updated : 31 May 2025 05:20 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71.360-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது. இதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.8,920-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71,360-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.77,840-க்கு விற்பனையானது.

அதேநேரத்தில், வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி நேற்று ரூ.1,11,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x