Published : 25 May 2025 10:23 AM
Last Updated : 25 May 2025 10:23 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71,920-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.8,990-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71,920-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.78,456-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x