Published : 13 May 2025 11:02 PM
Last Updated : 13 May 2025 11:02 PM
மதுரை: ஜூன் 13-ம் தேதி முதல் மதுரை - அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு, இரவு நேரத்தில் சென்னைக்கு விமானம் இயக்கப்படுகிறது. இதனிடையே, தனியார் விமான நிறுவனம் ஒன்று மதுரை - அபுதாபி வழித்தடத்தில் வாரத்தில் 3 நாட்கள் புதிய விமான சேவையை தொடங்க இருக்கிறது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியது: ஜூன் 13-ம் தேதி முதல் மதுரையிலிருந்து அபுதாபிக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் புதிய விமானம் இயக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்திய நேரப்படி, மதுரையிலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு, அபுதாபி நேரப்படி மாலை 5.20 மணிக்கு அங்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் அபுதாபி நேரப்படி, காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி பிற்பகல் 1.50 மணிக்கு மதுரை வருகிறது. பயணிகளின் ஆதரவை பொறுத்து, கூடுதல் நாட்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT