Published : 12 May 2025 10:19 AM
Last Updated : 12 May 2025 10:19 AM
சென்னை: சென்னையில் இன்று (மே.12) தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்துள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் மூண்டதை ஒட்டி, மே.7 ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.8,880-க்கும், பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் ரூ.71,040-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனையாகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கம் கடந்த மே 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,040-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் மே 2-ம் தேதி விற்பனையான அளவிலேயே விற்பனையாகிறது. மே.8-ம் தேதி தங்கம் ஒரு பவுன் ரூ.73,040-க்கு விற்பனையானதே இம்மாதத்தின் அதிகபட்ச உச்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT