Published : 02 May 2025 06:38 AM
Last Updated : 02 May 2025 06:38 AM
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எனும் பொருளாதார வளர்ச்சி 6.5-6.7 சதவீதமாக இருக்கும் என்று டெலாய்ட் கணித்துள்ளது.
இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலக வர்த்தக சூழல் நிச்சயமற்ற சூழ்நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி சலுகைகள் உள்நாட்டு தேவையில் விறுவிறுப்பை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5-6.7 சதவீதத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த நிதியாண்டில் ஜிபிடி வளர்ச்சி 6.3-6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வோர் தேவையை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் பயனாக கடந்தாண்டை விட நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு மிகுந்த பயனளிக்கும். அது, அமெரிக்க சந்தையில் உள்ள புதிய வாய்ப்புகளை கண்டறிந்து இந்தியாவின் வர்த்தகத்தை மேம்படுத்தவும், பரவலாக்கவும் உதவும். இவ்வாறு டெலாய்ட் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT