Published : 10 Apr 2025 08:26 AM
Last Updated : 10 Apr 2025 08:26 AM

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்தது: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு

மும்பை: வங்​கி​கள் ரிசர்வ் வங்​கி​யிட​மிருந்து பெறும் குறுகிய கால கடனுக்​கான வட்டி (ரெப்​போ) விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீத​மாக நிர்​ண​யித்​துள்​ளது. இதையடுத்​து, வீடு, வாகன கடன்​களுக்​கான வட்டி விகிதம் குறை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ரிசர்வ் வங்கி நடப்​பாண்​டில் ரெப்​போ வட்டி விகிதத்தை குறைப்​பது இது இரண்​டாவது முறை. முன்​ன​தாக கடந்த பிப்​ர​வரி​யில் ரெப்​போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்​கப்​பட்டு 6.25 சதவீத​மாக நிலைநிறுத்​தப்​பட்​டது. இந்த நிலை​யில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட பணவியல் கொள்​கை​யில் ரெப்​போ விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீத​மாக நிர்​ண​யித்​துள்​ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்​சய் மல்​ஹோத்ரா கூறுகையில், ‘‘பணவியல் கொள்கை குழு​வில் ரெப்​போ விகிதத்​தை குறைக்க ஒரு மனதாக ஒப்​புதல் தெரிவிக்​கப்​பட்​டது. இதனால், கடன் செல​வினம் குறைந்து வாடிக்​கை​யாளர்​களுக்கு குறைந்த வட்டி விகிதத்​தில் வங்​கி​கள் கடன்​களை வழங்​கும். நடப்பு நிதி​யாண்​டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.7-ல் இருந்து 6.5% ஆக இருக்கும் என குறைத்து மதிப்​பிடப்​பட்​டுள்​ளது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x