Published : 26 Mar 2025 06:30 AM
Last Updated : 26 Mar 2025 06:30 AM

தங்கம் விலை சரிவு: 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.65,480-ககு விற்பனை விற்பனையானது. கடந்த 5 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.8,185-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்தது ரூ.65,480-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை கடந்த 5 நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 20-ம் தேதி ஒரு பவுன் ரூ.66, 480 என்ற புதிய உச்சத்தை தொட்டது. மறுநாள் 21-ம் தேதி பவுனுக்கு ரூ.320-ம், 22-ம் தேதி ரூ.320-ம், 24-ம் தேதி ரூ.120-ம் குறைந்து விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஒரு பவுனுக்கு ரூ.240 குறைந்தது. இதன்மூலம், கடந்த 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் நேற்று ரூ.71,432-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.110-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x