Published : 01 Mar 2025 04:12 AM
Last Updated : 01 Mar 2025 04:12 AM

2024-25-ம் ஆண்டு பி.எப் வட்டி 8.25 சதவீதமாக தொடரும்

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2024-25-ம் நிதியாண்டில் 8.25 சதவீதமாக தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) உயர்நிலை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பி.எப் சேமிப்புக்கான வட்டியை 2024-25-ம் ஆண்டில் 8.25 சதவீமாக தொடர முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்தது, 7 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குளில் பி.எப் சேமிப்புக்கான வட்டி செலுத்தப்படும்.

கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரியில், பி.எப் வட்டியை 8.15 சதவீதத்திலிருந்து, 8.25 சதவீதமாக உயர்த்தியது. கடந்த 2022-ம் ஆண்டு பி.எப் வட்டி 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீமாக குறைக்கப்பட்டது. இது கடந்த 1977-ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வந்த வட்டியில் மிகக் குறைந்தது ஆகும். கடந்த 2015-16-ம் நிதியாண்டில் பி.எப் வட்டி வீதம் 8.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x