Published : 26 Feb 2025 04:35 AM
Last Updated : 26 Feb 2025 04:35 AM

நாட்டின் முதல் ஹைபர்லூப் பரிசோதனை வழித்தடம் தயார்: அரை மணி நேரத்தில் 350 கி.மீ. தூரம் பயணிக்கலாம்

ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி உருவாக்கிய நாட்டின் முதல் ஹைபர் லூப் பரிசோதனை வழித்தடம் தயார் நிலையில் உள்ளது.

நீண்ட தூர பயணத்துக்கான அதிவேக ரயில் போக்குவரத்து ஹைபர்லூப் என அழைக்கப்படுகிறது. இதில் வெற்றிட இரும்புக் குழாய்கள் வழியாக, ரயில்கள் எலக்ட்ரோ மேக்னடிக் தொழில் நுட்பத்தில் காற்றின் உராய்வு இன்றி, மேக் 1 வேகத்தில், அதாவது மணிக்கு 761 மைல் வேகத்தில் செல்லும். குறைந்த எரிசக்தியில் விமானத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும். இந்த புதுமையான ரயில் போக்குவரத்துக்கான 422 மீட்டர் நீள பரிசோதனை வழித்தடத்தை ரயில்வே அமைச்சகம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சென்னை ஐஐடி, அதன் தையூர் டிஸ்கவரி வளாகத்தில் உருவாக்கியுள்ளது. இந்த ஹைபர்லூப் ரயில் போக்குவரத்து அமலுக்கு வந்தால் 350 கி.மீ தூர பயணத்தை அதாவது டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு அரை மணி நேரத்தில் செல்லலாம்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சர், ‘‘ ஹைபர்லூப் போக்குவரத்துக்கான 422 மீட்டர் பரிசோதனை வழித்தடம் தயார். ஹைபர்லூப் திட்டத்தை மேம்படுத்த ஏற்கெனவே இரண்டு கட்ட மானியமாக தலா 1 மில்லியன் டாலர் (ரூ.8.71 கோடி) வழங்கப்பட்டது. தற்போது 3-வது கட்ட மானியம் சென்னை ஐஐடிக்கு வழங்கப்படவுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x