Published : 21 Feb 2025 12:26 AM
Last Updated : 21 Feb 2025 12:26 AM
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 11-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,480-ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து, தங்கம் விலை அதிகரித்தும், குறைந்தும் வந்தது. ந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் உயர்ந்தது. பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ரூ.64,560 என்ற புதிய உச்சத்தை எட்டியது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ரூ.8,070-க்கு விற்பனையானது.
அதேபோல, 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.70,424-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகை வாங்குவோர் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.108-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1 லட்சத்துக்கு 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT