Published : 14 Feb 2025 05:51 AM
Last Updated : 14 Feb 2025 05:51 AM
சென்னை: தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுவந்தது. அதிலும், பிப்.11-ம் தேதி வரலாறு காணாத வகையில், புதிய உச்சத்தை தொட்டு ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு, 12-ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்து, ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று மீண்டும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.63,840-க்கும் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து, ரூ.7,980-க்கும் விற்பனையானது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் பவுன் ரூ.69,640-க்கு விற்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT