Published : 04 Feb 2025 09:48 AM
Last Updated : 04 Feb 2025 09:48 AM

பவுனுக்கு ரூ.840 உயர்வு: மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை

சென்னை: வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைந்து சற்றே ஆறுதல் அளித்த நிலையில் இரண்டாம் நாளான இன்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்து விற்பனையானது. பின்னர், விலை குறைந்து, மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு பவுன் தங்கம் விலை கடந்த ஜனவரி 22-ம் தேதி ரூ.60,200, கடந்த 24-ம் தேதி ரூ.60,440, கடந்த 29-ம் தேதி ரூ.60,760, கடந்த 30-ம் தேதி ரூ.60,880 என தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சங்களை தொட்டது.

31-ம் தேதி கிராமுக்கு ரூ.120 என பவுனுக்கு ரூ.960 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,730-க்கும், ஒரு பவுன் ரூ.61,840-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து மத்திய பட்ஜெட் எதிரொலியாக பிப்.1 அன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.60 என பவுனுக்கு ரூ.480 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,790-க்கும், ஒரு பவுன் ரூ.62,320-க்கும் விற்கப்பட்டது.

கடந்த வாரம் முழுவதும் பல புதிய உச்சங்களைத் தொட்டு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சற்றே குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் உயர்ந்து மற்றொரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,810-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.62,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.106-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,06,000 ஆக விற்பனையாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x