Published : 02 Feb 2025 08:33 AM
Last Updated : 02 Feb 2025 08:33 AM
காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதமாக இருந்து வந்தது. அது பட்ஜெட்டில் 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முழு ப்ரீமியம் தொகையையும் இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த உயர்வு பொருந்தும். அந்நியநேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டு எளிமையாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டதன் மூலம், காப்பீடுதுறையில் செய்ய முன் முதலீடுவெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் முன் வரும். அப்போது நாடு முழுவதும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போது நாட்டில்25 ஆயுள் காப்பீடு நிறுவனங்களும், 34 பொது காப்பீடு நிறுவனங்களும் உள்ளன. காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு, கடந்த 2015-ம் ஆண்டில் 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த 2021-ம் ஆண்டில் 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட்-அப்: நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கலான பொது பட்ஜெட்டில் கூறியுள்ளதாவது: நாட்டில் தொழில்முனைவோரை உருவாக்கும் பொருட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக ஊக்கம் அளித்து வருகிறது. 2016-ம் ஆண்டு முதலே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான நிதியை அவ்வப்போது மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2025-26-ம் நிதியாண்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்காக நிதித்திட்டங்களுக்கான புதிய நிதித்திட்டம் (எப்எப்எஸ்) என்ற பெயரில் நிதியத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிதியத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேகமெடுக்கும் லித்தியம்-ஐயன் பேட்டரி தயாரிப்பு: மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் 35 மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன. அதேபோன்று மொபைல்போன் பேட்டரி தயாரிப்பில் 28 மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கை நீட்டிக்க மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பரிந்துரை செய்துள்ளார்.
அவரின் இந்த முடிவால், உள்நாட்டில் லித்தியம்-அயன் பேட்டரிகள் தயாரிப்பு வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, மொபைல்போன் மற்றும் மின் வாகன உற்பத்தியாளர்களும் இந்த வரி விலக்கு சலுகை நீட்டிப்பால் பெரிதும் பயனடைவர் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT