Published : 17 Jan 2025 11:21 AM
Last Updated : 17 Jan 2025 11:21 AM
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த அக்டோபரில் தங்கம் விலை பவுன் ரூ.59,640-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்தது. அதன் பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த டிச. 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,450-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு பவுன் ரூ.59,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனையாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT