Published : 15 Jan 2025 11:43 PM
Last Updated : 15 Jan 2025 11:43 PM
கோவை: எல் அண்ட் டி புறவழிச்சாலையை 4 அல்லது 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். கோவை - பாலக்காடு சாலையில் மரப்பாலம் பகுதியில் ரயல்வே மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என, பொள்ளா்சி எம்.பி-யிடம் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ) சார்பில், நிர்வாகக்குழு கூட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் நடந்தது.
இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந் வரவேற்றார்.
பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். அவரிடம் தொழில்துறை சார்பில், அளிக்கப்பட்ட மனுவில் கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும். வளைகுடா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - மதுரை இடையே நேரடி ரயில் சேவை. கோவை - திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு பொள்ளாச்சி, பழநி, மதுரை, கோவில்பட்டி வழியாக ரயில் சேவை மற்றும் கோவை -ரமேஸ்வரம் இடையே பொள்ளாச்சி வழியாக இரவு நேர ரயில் சேவை தொடங்க வேண்டும். கோவை - கொல்லம் இடையே பொள்ளாச்சி, பழநி, மதுரை, ராஜபாளையம், செங்கோட்டை வழியாக ரயில் சேவை தொடங்க வேண்டும்.
கோவை ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கோவை சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் மாற்ற வேண்டும். வடகோவை ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பார்ம் அமைக்க வேண்டும். திருவனந்தபுரம் - மங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும். சேலம், திருச்சி, மதுரையை இணைக்கும் வகையில் ‘ஏசி’ வசதி கொண்ட மெமு ரயில் சேவை தொடங்க வேண்டும்.
மேற்கு புறவழிச்சாலை திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கிழக்கு புறவழிச்சாலை மற்றும் கோவை - கரூர் எக்ஸ்பிரஸ் வழித்தட திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, சரவணம்பட்டி பகுதிகளில் மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். எல்&டி புறவழிச்சாலையை நான்கு அல்லது ஆறு வழிச்சாலையாக மாற்றியமைக்க வேண்டும். மதுக்கரை - பாலக்காடு சாலையில் மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT