Published : 15 Sep 2024 04:55 AM
Last Updated : 15 Sep 2024 04:55 AM

ரயில் நிலையங்களில் டெலிவரி: சோமாட்டோ புதிய ஒப்பந்தம்

புதுடெல்லி: சோமாட்டோ நிறுவனம் அதன் உணவு டெலிவரி சேவையை 88 நகரங்களில் உள்ள 100 ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதற்காக சோமாட்டோ நிறுவனம் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்துடன் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ரயில் பயணிகள் தங்கள் மொபைல் போனில் சோமாட்டோ செயலியைத் திறந்து தங்களுக்கான உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம். பிஎன்ஆர் அடிப்படையில், அவர்களது இருக்கைக்கு வந்து உணவு டெலிவரி செய்யப்படும்.

இது குறித்த அறிவிப்பை சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் நேற்று வெளியிட்டார். அதில், “உங்களது ரயில் பெட்டிக்கு நேரடியாக வந்து உணவு டெலிவரி செய்யப்படும். இதுவரையில், 10 லட்சம் ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளோம். அடுத்து பயணம் செய்யும்போது உணவை ஆர்டர் செய்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐஆர்சிடிசி வெளியிட்ட பதிவில், “ரயில் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்த ஐஆர்சிடிசி உறுதி பூண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வழியாக, பலவிதமான உணவுகள் பயணிகளுக்கு கிடைக்க ஏற் பாடு செய்கிறோம்” என்று பதிவிட் டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x