Published : 27 Aug 2024 05:02 AM
Last Updated : 27 Aug 2024 05:02 AM
சென்னை: ஆவினில் மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகிய 3 புதிய பொருட்களை அறிமுகப்படுத்த ஆய்வுநடைபெறுகிறது என்று ஆவின்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவுபால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தற்போது தினசரி 35 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்புசத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா,நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்கப்படுகின்றன. இதுதவிர வெண்ணெய், நெய்,தயிர், மோர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம்முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின்பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
ஆவின் பால் மற்றும் பால்பொருட்கள் அனைத்து இடங்களில் கிடைக்க வேண்டும் என்றநோக்கில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர, புதிய பொருட்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கடந்த வாரம் நிருபர்களிடம் கூறும்போது, "மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகியவற்றை விரைவில் மக்களுக்கு கொடுக்கஉள்ளோம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த 3 புதிய பொருட்கள் தொடர்பாக தீவிர ஆய்வு நடைபெறுகிறது. இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆவினில் மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காப்பி, அஸ்வகந்தா பால் ஆகிய 3 புதிய பொருட்களை அறிமுகப்படுத்த ஆராயப்படுகிறது. இதற்காக ஒரு தொழில்நுட்ப குழு, இவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆவின் சார்பில் ரோஸ்மில்க் அறிமுகப்படுத்தினோம். அதற்கு நல்ல வரவேற்வு கிடைத்தது. இதுபோல, இந்த 3 பொருட்களுக்கு எங்கு எல்லாம் தேவை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து,சோதனை அடிப்படையில் விநியோகிக்கப்படும். தேவை அடிப்படையில், இவைகள் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT