Published : 26 Aug 2024 04:26 AM
Last Updated : 26 Aug 2024 04:26 AM
வாஷிங்டன்: “எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம்பெறுகிறேன்” என்று அமேசான் ஊழியர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஊழியர்கள் தங்கள் கருத்துகளை பகிரும் ‘பிளைண்ட்’ தளத்தில்அமேசான் ஊழியர் வெளியிட்டபதிவில், “கூகுள் நிறுவனம் ஆட்குறைப்பை மேற்கொண்டபோது என்னுடைய வேலை பறிபோனது. இதையடுத்து அமேசான் நிறுவனத்தில் சேர்ந்தேன். கடந்த 1.5 ஆண்டுகளாக, முதுநிலை தொழில்நுட்ப திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய ஊதியம் ஆண்டுக்குரூ.3.10 கோடி. இந்த ஊதியத்துக்கான எந்த வேலையும் நான் அங்கு செய்வதில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகக் குறைவான வேலைகளையே நான்செய்துள்ளேன். வெறும் 3 நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை செய்ய 3 மாதங்கள்எடுத்துள்ளேன்.
என்னுடைய வேலை நேரத்தில் பெரும் பகுதி அலுவலக மீட்டிங்களுக்கே கழிந்துவிடுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்காக ஊதியம் பெறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பதிவின்ஸ் கீரின்சாட் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அவரது பதிவை சிலர் ஆதரித்தும் சிலர் விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “வேலை பார்க்காமல் சும்மாஇருப்பதால் இழப்பு ஊழியருக்குத்தான். சும்மா இருப்பதால் எந்தக் கற்றலும் நிகழ்வதில்லை. தவிர, இந்த செயல்பாடு, நன்றாக வேலை பார்ப்பவர்களையும் பாதிக்கக் கூடியது” என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
“சிலருக்கு அதிக வேலையும் சிலருக்கு குறைவான வேலையும் வழங்கப்படுவது கார்ப்பரேட் கட்டமைப்பில் உள்ள பிரச்சினை. நிறுவனம் அளிக்கும் பணியை செய்ய முடியாது என்று எந்தஊழியரும் சொல்லிவிட முடியாது. அவருக்கு குறைவான வேலை வந்துள்ளது. அதை அவர் செய்துள்ளார். நிறுவனம் அவருக்கு அதிக வேலை வழங்கினால், அதை அவர் செய்து முடிப்பார்” என்று சிலர் அமேசான் ஊழியருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT