Published : 19 Aug 2024 12:06 PM
Last Updated : 19 Aug 2024 12:06 PM
மும்பை: ஸ்விக்கி நிறுவனத்தை தொடர்ந்து ‘குரூப் ஆர்டர்’ என்ற அம்சத்தை சொமேட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுக செய்துள்ளது.
இந்தியாவில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களும் தொடர்ந்து பல்வேறு ஆஃபர்கள், வசதிகளை வாரி வழங்கி வருகின்றன.
அந்தவகையில், தற்போது உணவு டெலிவரி நிறுவனங்கள் கையில் எடுத்திருக்கும் புதிய அம்சம் ‘குரூப் ஆர்டர்’. அதாவது அலுலவகத்தில் ஒன்றாக பணிபுரியும் ஊழியர்களோ அல்லது நண்பர்களோ ஒரு பொதுவாக லிங்க்-ஐ உருவாக்கி அதன் உள்ளே சென்று தங்களுக்கு வேண்டிய உணவுகளை அவரவர் போன்கள் வழியே ‘கார்ட்’டில் சேர்க்க முடியும்.
இதன் மூலம் ஒவ்வொருவரும் தனக்கு இதுதான் வேண்டும் என்று தனித்தனியே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இந்த புதிய அம்சத்தை சில நாட்களுக்கு முன்பு ஸ்விக்கி நிறுவனம் அறிமுகம் செய்த நிலையில், அது இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் எதிரொலியாக சொமேட்டோ நிறுவனமும் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப்பெறும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT