Published : 30 Jul 2024 05:51 AM
Last Updated : 30 Jul 2024 05:51 AM
சென்னை: இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன உரிமை யாளர்களிடமிருந்து 33% பங்குகளை அல்ட்ராடெக் வாங்குவதால் ஊழியர் கள் பயப்பட வேண்டாம் என நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 22.77% பங்குகளை பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் வாங்கியது. இந்நிலையில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் வசம் உள்ள 32.72% பங்குகளை வாங்க அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவன இயக்குநர்கள் குழு கடந்த 28-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. ஒரு பங்கின் விலை ரூ.390 வீதம் மொத்தம் ரூ.3,954 கோடிக்கு இந்த பரிவர்த்தனை நடை பெறுகிறது.
இதில் அதிகபட்சமாக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் வசமிருக் கும் 28.42% பங்குகள் அல்ட்ராடெக் வசமாகிறது. இந்த பரிவர்த்தனை மூலம் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 51 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்குகள் அல்ட்ராடெக் வசமாக உள்ளது. இந்தபரிவர்த் தனை நடைமுறைகள் 6 மாதங்களுக்குள் முடி வடையும் என எதிர்பார்க் கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் ஊழியர்கள் கூட்டத்தில் பேசியதாவது:
இந்தியா சிமென்ட்ஸ் பங்குகள் கைமாறுவதால் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஊழியர் கள் பயப்பட வேண்டாம். இது தொடர் பாக பிர்லா குழுமத்தின் தலைவருடன் பேசினேன். ஊழியர்கள் வேலையில் தொடரலாம் என அவர் உறுதி அளித்துள்ளார்.
ஊழியர்கள் அனை வரும் வேலையில் தொடரலாம். யாரும் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். சிறப்பாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வெகுமதி கிடைக்கும். தங்கள் எதிர்காலத்துக்கு அச்சு றுத்தல் ஏற்படும் என எண்ணத் தேவை யில்லை. என்னுடைய பதவிக் காலத்தில் இருந்தது போலவே அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கும்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதார சூழலும் நிர்வாகமும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம். அனைவருக்கும் நல்வாழ்த் துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் என்.சீனி வாசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT