Published : 20 Jul 2024 05:30 AM
Last Updated : 20 Jul 2024 05:30 AM
சென்னை: உத்தராகண்ட் மாநிலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான போர்ட்டலை (www.uttarastays.com) அம்மாநில சுற்றுலா வளர்ச்சி வாரியம் தொடங்கியுள்ளது.
தங்கும் விடுதி உரிமையாளர்கள் அதுபற்றிய தகவல்களை வழங்கி அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் இந்த போர்டலில் தங்களையும் இணைத்துக் கொள்ளலாம். இதற்காக தங்கும் கட்டணங்கள் அல்லது தங்களது வருவாய் குறித்து உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையிடம் விடுதி உரிமையாளர் பகிர வேண்டியதில்லை.
இந்த போர்டல் பொது மக்களுக்கு தங்கும் விடுதிகள் பற்றிய உண்மையான தகவல்களை வழங்கவும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான வழிமுறையை வழங்கவும் உருவாக்கப்பட்டதாகும். தற்போது உத்தராகண்ட் சுற்றுலாத் துறையில் சுமார் 5,000 விடுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா தொடர்பான செயல்பாடுகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. மேலும் விடுதி உரிமையாளர்கள் எந்த கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய விடுதி உரிமையாளர்களுக்கு முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் வசதி இலவசமாக கிடைக் கும்.
உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையானது தீன்தயாள் உபாத்யாய் ஹோம்ஸ்டே திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல விடுதிகளை மேம்படுத்த மானியம் வழங்குகிறது. கூடுதலாக உரிமையாளர்களுக்கு அவர்களின் வாடிக்கையாளர் சேவை திறன்களை மேம்படுத்த பல்வேறு பயிற்சியும் அளிக்கிறது.
உள்கட்டமைப்பை உருவாக்கு தல், உரிமையாளர்களுக்கு திறன்அடிப்படையிலான பயிற்சி அளித்தல் மற்றும் ஆன்லைன் போர்ட்டல் மூலம் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை இந்த போர்ட்டல் வழங்கும்என சுற்றுலாத் துறை தலைமை நிர்வாக அதிகாரி, யுடிடிபியின் செயலாளர் ஸ்ரீ சச்சின் குர்வே தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதி உரிமையாளர்களும் ஹோம்ஸ்டே நெட்வொர்க்கில் இணைந்து போர்ட்டலில் பதிவு செய்ய வரவேற்கப்படுகிறார்கள் என்றும் அழைப்பு விடுத்தார்.
யோகா, இயற்கை மருத்துவம்,பஞ்ச் கர்மா, ஆயுர்வேத மசாஜ்போன்ற ஆரோக்கிய மையங்களின் சேவைகளை சுற்றுலாப் பயணிகள் பெறுவதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரோக்கிய மையங்களுடன் தங்கும் விடுதிகளை இணைப்பதை எதிர்காலத் திட்டமாக அரசு வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT