Published : 14 Aug 2014 12:00 AM
Last Updated : 14 Aug 2014 12:00 AM
• 100 நாடுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் பிரமள் குழுமத்தில் தலைவர். இந்தியா வென்ச்சர் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். கல்விக்காக செயல்பட்டுவரும் என்.ஜி.ஓ.வான பிரதாம் இந்தியாவின் தலைவர்.
• 29-வது வயதில் தன்னுடைய குடும்பத் தொழிலான ஜவுளித் தொழிலுக்கு வந்தார். 1980களில் ஜவுளித் தொழிலை விட்டு வெளியேறி பார்மா துறைக்கு வந்தார். இத்தனைக்கும் அப்போது இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவந்தன.
• 2010ம் ஆண்டு இவரது ஜெனரிக் வியாபாரத்தை 372 கோடி டாலருக்கு அபோட் (abott) நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்.
• இதில் கிடைத்த தொகையை கொண்டு வோடபோன் நிறுவனத்தின் 11 சதவீத பங்குகளை வாங்கினார். பின்னர் அதிலிருந்து முழுமையாக வெளியேறினார்
• கடந்த மே மாதத்திலிருந்து ஸ்ரீராம் கேபிடல் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வருகிறார். விரைவில் அந்த குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.
• ஜம்னாலால் பஜாஜ் நிர்வாகக் கல்லூரியில் மேலாண்மை துறையில் முதுகலைபட்டம் பெற்றவர். ஹார்வேர்ட் பிஸினஸ் கல்லூரி தலைவருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினரும் கூட.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT