Published : 22 Apr 2024 05:17 AM
Last Updated : 22 Apr 2024 05:17 AM

இபிஎஃப்ஓ-வில் 2023-24-ம் ஆண்டில் நிதி கோரிய 30.49 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகத்தின் சார்பில், 2023-24-ம்நிதி ஆண்டில் 30.49 லட்சம் நிதி கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகத்தின் கீழ், தமிழகத்தில் 10 அலுவலகங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 அலுவலகங்களும் உள்ளன. இந்த அலுவலகங்களில் 79,433 நிறுவனங்களில் பணிபுரியும் 2.05 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.

இங்கு 2023-24-ம் நிதி ஆண்டில் 30.49 லட்சம் நிதி கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 2.74 லட்சம் மனுக்கள் அதிகம் ஆகும்.

இதேபோல், 2023-24-ம் ஆண்டில் 16,062 புதிய ஓய்வூதியதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்காகும். இபிஎஃப்ஓ சென்னை மற்றும் புதுச்சேரி மண்டலம் மொத்தம் 3.14 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சேவை செய்கிறது.

2022-23-ம் ஆண்டில், கட்டணம் செலுத்த தவறிய நிறுவனங்களிடம் இருந்து நிலுவைத் தொகையாக ரூ.16.14 கோடி வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் ரூ.275.32 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

குறைகள் தொடர்பான விஷயங்களில் இந்த மண்டலத்தில், 2022-23-ம் ஆண்டு 81,769 குறைகள் தீர்த்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஆண்டில் 97,396 உறுப்பினர்கள், ஓய்வூதிய தாரர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x