Published : 25 Mar 2024 05:20 AM
Last Updated : 25 Mar 2024 05:20 AM

நெருக்கடியான கால கட்டத்தில் உதவிய நண்பர்களுக்கு பல லட்சம் பங்குகள் பரிசு வழங்கும் ஐடிஎஃப்சி சிஇஓ வைத்தியநாதன்

வைத்தியநாதன்

மும்பை

நெருக்கடியான அந்த காலக்கட்டங்களில் தனக்கும், தனது குடும்பத்துக்கும் உதவி செய்த நண்பர்களை நினைத்துப் பார்த்து இன்றைக்கு அவர்களைத் தேடித்தேடி நன்றி கடன் செலுத்தும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) வி. வைத்தியநாதன் செயலை பலர் வியந்து பாராட்டி வருகின்றனர்.

தனது வாழ்க்கையில் சிறியஉதவிகள் செய்த நண்பர்களுக்கும் கூட பல லட்சம் மதிப்பிலான பங்குகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியடை செய்வதில் வைத்தியநாதனுக்கு அளப்பறிய சந்தோஷம் மட்டுமின்றி மிகப் பெரிய மனநிம்மதி. அந்த வகையில் வைத்தியநாதன் ரூ.5.5 கோடி மதிப்பிலான 7 லட்சம் ஐடிஎஃப்சி வங்கி பங்குகளை 5 தனி நபர்களுக்கு பிரித்து வழங்கி தனது தாராள கொடை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து மும்பை பங்குச்சந்தையிடம் ஐடிஎப்சி அளித்துள்ள அறிக்கையில், “நிர்வாக இயக்குநர்மற்றும் சிஇஓவான வி. வைத்தியநாதன் ஐடிஎஃப்சியின் 7 லட்சம் பங்குகளை 5 பேருக்கு மார்ச் 21,2024 அன்று வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையின்படி ராணுவ வீரராக இருந்து ஓய்வுபெற்ற சம்பத்குமாரிடமிருந்து நீண்ட காலத்துக்கு முன்பு வைத்தியநாதன் ரூ.1,000 கடனாக வாங்கியுள்ளார். தற்போதுஅதற்கு பிரதிபலனாக 2.5 லட்சம் பங்குகளை சம்பத் குமாரின் மருத்துவ தேவைகளுக்காக வைத்தியநாதன் வழங்கியுள்ளார்.

அதேபோன்று, நண்பர் கனோஜியா வைத்தியநாதன் வீடு வாங்குவதற்காக உதவிகளை செய்துள்ளார். இதற்கு நன்றிக் கடனாக கனோஜியாவுக்கு 2,75,000 பங்குகளும், கூடுதல் பரிசாக 50,000 பங்குகளையும் வைத்தியநாதன் வழங்கி உள்ளார்.

தவிர, குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்கி ஆதரவுஅளித்ததற்காக சமீர் மாத்ரேவுக்கு 50,000 ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குகளையும், மயங் மிர்னால் கோஷுக்கு 75,000 பங்குகளையும் வழங்கி வைத்தியநாதன் நன்றி உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரை ஐடிஎஃப்சியி்ல் தன் கைவசமுள்ள மொத்த பங்குகளில் ஏறத்தாழ 40 சதவீத பங்குகளை அவர் வாழ்க்கையில் உதவி செய்த நண்பர்களுக்கு வைத்தியநாதன் தேடித் தேடி வழங்கி வருகிறார். இது அவரதுநன்றி உணர்வையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என வைத்தியநாதனின் உ றவினர்கள் தெரிவித்துள்ளனர். வைத்தியநாதன் தற்போது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் 1% பங்குகளை வைத்திருக்கிறார், இதன் மதிப்பு சுமார் ரூ. 550 கோடி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x