Published : 22 Feb 2024 04:14 AM
Last Updated : 22 Feb 2024 04:14 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நாளை ( 23-ம் தேதி ) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கடன் முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில், ஆட்சியர் அலுவல கத்தில் நாளை ( 23-ம் தேதி ) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கடன் முகாம் நடைபெறவுள்ளது. முகாமில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கடன் வழங்குதல், தொழில் கடனுக்கான ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பாக வழங்கப்படும் அரசு சலுகைகள் பற்றி விரிவாக விளக்கப்படும்.
முகாமில், மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதேபோல, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட புத்தாக்க சங்கம், சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் பங்கேற்று, அனைத்து தொழில் சார்ந்த கடன் உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
முகாமில் பங்கேற்க வருபவர்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் வழங்கும் உத்யம் பதிவுச் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் சுயதொழிலுக்கான திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள லாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT