Published : 01 Feb 2024 03:17 PM Last Updated : 01 Feb 2024 03:17 PM
2 கோடி வீடுகள் முதல் ‘வரி வழக்கு’ ரத்து வரை: இடைக்கால பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள் என்னென்ன?
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள புதிய அறிவிப்புகள்:
அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.
வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்.
கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
அங்கன்வாடி மற்றும் ஆஷா மருத்துவ பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
பால் உற்பத்தியை அதிகரித்து பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற நடவடிக்கை.
பால்பண்ணை உரிமையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய திட்டம்.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.
தொழில்நுப்டம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.
தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.
நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தும்.
3 சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் புதிதாக அமைக்கப்படும்.
3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி வரும் ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர்.
மாநிலங்களுக்கு 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் வழங்க முடிவு
புத்தொழில் நிறுவனங்களுக்கு வரி ஊக்கத்தொகை
தீவுப் பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்க திட்டம்
எண்ணெய் வித்துக்களுக்கான சுயசார்பு இயக்கம் அமலாக்கப்படும்
5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கள்: மீன்வளத் துறையை ஊக்குவிக்கும் வகையில், ஐந்து ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கள் அமைக்கப்படும். பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டம் கீழ்க்கண்டவாறு முடுக்கி விடப்படும்: 1. நீர்வாழ் உயிரின வளர்ப்பு உற்பத்தித் திறனை தற்போதுள்ள 3 டன்னிலிருந்து ஹெக்டேருக்கு 5 டன்னாக அதிகரித்தல்; 2. ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்குதல்; 3. எதிர்காலத்தில் 55 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல். | நீலப் பொருளாதாரம் 2.0-க்கான பருவநிலை நெகிழ்திறன் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, ஒருங்கிணைந்த மற்றும் பல்துறை அணுகுமுறையுடன் கடலோர மீன்வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவற்றுக்கான திட்டம் தொடங்கப்படும்.
வந்தே பாரத் ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க முடிவு
சுற்றுலா மேம்பாட்டுக்காக நீண்டகால அடிப்படையிலான கடன் உதவி வழங்கப்படும்.
ரூ.25,000 வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் ரத்து செய்யப்படும். இதன்மூலம் 1 கோடி பேர் பயனடைவர்.
வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.
WRITE A COMMENT