Published : 29 Jan 2024 01:56 PM
Last Updated : 29 Jan 2024 01:56 PM
புதுடெல்லி: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின் (LVMH) சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட். ஆடம்பரப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், எல்விஎம்ஹெச் (LVMH) பங்குகள் 30 சதவீதம் அதிகரித்த பிறகு, 2023 ஆம் ஆண்டில் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 39 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த வணிக இதழான ஃபோர்ப்ஸின் (Forbes) அறிக்கையின்படி, உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் (LVMH) சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault). உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பிரான்ஸைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்கை முந்தி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எலான் மஸ்க் 2-வது இடத்தில் இருந்து வந்தார். இதையடுத்து டெஸ்டாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் மீண்டும் முதல் இடத்துக்கு வந்தார். பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். தற்போது அது எக்ஸ் வலைதளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பணக்காரர்களில் பட்டியலில் முதல் இடத்தில் பிரான்ஸ் நாட்டுத் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். எலான் மஸ்கின் கார் நிறுவனமான டெஸ்லாவின் பங்கு தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. அதோடு, பெர்னார்ட் அர்னால்டின் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் (LVMH) பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது.
தற்போது, அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 204.5 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடம்பரப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், எல்விஎம்ஹெச் (LVMH) பங்குகள் 30 சதவீதம் அதிகரித்த பிறகு, 2023 ஆம் ஆண்டில் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 39 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில், பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி 11-வது இடத்திலும், கவுதம் அதானி 16-வது இடத்திலும் இருக்கின்றனர். எலான் மஸ்ன், பெர்னார்ட் அர்னால்ட் என இரண்டு கோடீஸ்வரர்களும் 2022 ஆம் ஆண்டு முதல் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ப்ஸ் அறிக்கைப்படி, உலகின் முதல் 10 பணக்காரர்கள்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT