Published : 23 Jul 2014 02:08 PM
Last Updated : 23 Jul 2014 02:08 PM

பிலிப் கிளார்க் - இவரைத் தெரியுமா?

$ இங்கிலாந்தின் முக்கியமான ரீடெய்ல் நிறுவனமான டெஸ்கோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

$ 1960ம் ஆண்டு பிறந்த இவர் 14 வயதில் பள்ளி மாணவனாக இருக்கும்போது டெஸ்கோ நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக பணியாற்றினார்.

$ 1981ம் ஆண்டு லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார படிப்பை முடித்தவுடன் நிர்வாகத்துறையில் பயிற்சியாளராக டெஸ்கோ நிறுவனத்தில் சேர்ந்தார்.

$ அதன் பிறகு பல பொறுப்புகளை வகித்த இவர் 1998ம் ஆண்டு டெஸ்கோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இணைந்தார்.

$ 2011ம் ஆண்டு மார்ச் மாதம் டெஸ்கோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

$ இவர் பொறுப்பேற்றுக்கொண்ட போது இந்த நிறுவனம் இங்கிலாந்தில் 30.7 சதவீத சந்தை மதிப்பை கொண்டிருந்தது. இப்போது சரிந்து 28.9 சதவீதமாக குறைந்தது. மேலும் லாப விகிதங்கள் குறைந்ததால் இவரை நிர்வாகம் விடுவித்தது. அக்டோபருடன் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

$ இது உணர்ச்சிமயமான தருணமாக இருந்தாலும், நிம்மதியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் கிளார்க்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x