Published : 28 Jul 2014 10:00 AM
Last Updated : 28 Jul 2014 10:00 AM
சென்செக்ஸில் இருக்கும் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் சராசரி சம்பளம் ரூ.10 கோடியாகும். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் முக்கிய நிறுவனங்களின் சிஇஓகளின் சராசரி சம்பளம் ரூ.100 கோடியாக இருக்கிறது.
2013-14ம் நிதி ஆண்டில் சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் நிறுவனங்களின் சராசரி சம்பளம் 9.9 கோடி ரூபாயாகும். இதற்கு முந்தைய வருடம் இது 8.5 கோடி ரூபாயாக இருந்தது. அமெரிக்காவின் முக்கிய சந்தையான டவ்ஜோன்ஸ் குறியீட்டில் இருக்கும் நிறுவனங் களில் இருக்கும் சிஇஓ-களின் சராசரி சம்பளம் 105 கோடி ரூபாயாக இருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் முக்கிய நிறுவனங்களின் சிஇஓ-களின் சராசரி சம்பளம் ரூ. 60 கோடியாகவும், ஜெர்மனியில் ரூ. 50 கோடியாகவும் இருக்கிறது.
சென்செக்ஸ் பட்டியலில் 6 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் சிஇஒ-களின் சம்பளத்தை எடுத்துக்கொண்டால் சராசரி சம்பளம் இன்னும் குறையும். இதில் 6 தனியார் நிறுவனங்கள் (எல் அண்ட் டி, சிப்லா, பார்தி ஏர்டெல், மாருதி, சன் பார்மா மற்றும் ஹிண்டால்கோ) தங்களின் சிஇஓகளின் சம்பளத்தை இன்னும் வெளியிடவில்லை.
எடுத்துக்கொள்ளப்பட்ட 18 நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் சி.இ.ஓ-களின் சம்பளம் இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சம்பளத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT