Published : 20 Jul 2021 09:44 AM
Last Updated : 20 Jul 2021 09:44 AM
சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துர்நாற்ற, பழுப்புநிற அரிசி விநியோகிக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஜூன் 14-ம் தேதியில் இருந்து ஆசிரியர்கள் மட்டும் மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை கவனித்து வருகின்றனர். மேலும், பள்ளி திறக்கும் வரை சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு, அரிசி, பருப்பு போன்ற உலர்பொருட்களுடன் 10 முட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிவகங்கை 48 காலனி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உலர்பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், அரிசி துர்நாற்றத்துடன் பழுப்புநிறமாக இருந்தது. இதேபோல், சிவகங்கை மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் தரமற்ற அரிசியே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவற்றை சமைத்து சாப்பிடாமல் கோழிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து, பெற்றோர் கூறுகையில், "சில மாதங்களாகவே தரமற்ற அரிசி தான் விநியோகித்து வருகின்றனர். சமைத்தால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அவற்றை சமைத்து சாப்பிட முடியவில்லை. தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT