Published : 15 Feb 2021 07:04 PM
Last Updated : 15 Feb 2021 07:04 PM
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்து 6.5 கிலோ கட்டி அகற்றிய மருத்துவர்களை டீன் ரத்தினவேல் பாராட்டினார்.
காரைக்குடி அருகே கோட்டையூரைச் சேர்ந்த அழகு மனைவி செல்வி (47). இவருக்கு 6 மாதங்களாக வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை உள்ளிட்டவை இருந்தன.
இதையடுத்து அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் வயிற்றில் பெரிய கட்டி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மகப்பேறு மற்றும் பெண்கள் நலத்துறை தலைமை மருத்துவர் மல்லிகா, இணைப் பேராசிரியர் காயத்ரி ஆலோசனைப்படி இணைப்பேராசிரியர் பிரசன்னலட்சுமி, உதவி பேராசிரியர்கள் விஜயலட்சுமி, சுவாதிஸ்ரீ, ஜெகதீஷ் ஆகியோர் பைப்ரைட்டு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றினர்.
அந்த கட்டி 6.5 கிலோ இருந்தது. கட்டியை அகற்றிய பிறகு செல்வி நலமாக உள்ளார். பிரபலமான சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய கூடிய இந்த அறுவைசிகிச்சையை செய்த சிவகங்கை மருத்துவக் குழுவினரை டீன் ரத்தினவேல் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT